17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடிகர் சங்க தேர்தலுக்காக திண்டுக்கல் வந்த நடிகர் விஷால்..

நடிகர் சங்க தேர்தலுக்காக திண்டுக்கல் வந்த நடிகர் விஷால்..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 2:32 pm

இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்காக சங்க உறுப்பினர்களை சந்திக்க இன்று (17/06/2019)  திண்டுக்கல் வந்திருந்த நடிகர் விஷால் பத்திரிகையாளை சந்தித்தார்.

அச்சந்திப்பின்போது நடிகர் சங்க தேர்தல்  நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம்.கட்டிடப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு இந்த தேர்தலை சந்திக்கிறோம். கடந்த மூன்று வருடங்களாக சொன்னதைச் செய்துள்ளோம். சொன்னதைவிட செய்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் நாடக நடிகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த அணி ஏன் மறுபடியும் தேர்தலை சந்திக்கிறது என்றால் நாங்கள் சொன்னதை முழுமையாக செய்துள்ளோம்.

ஒரு பணி மட்டும் தான் நிலுவையில் உள்ளது. இன்னும் ஐந்து மாதங்களில் சங்க கட்டிட பணிகளை முடித்து விடுவோம். தேர்தல் என்றாலே அரசியல் உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் உண்டு முப்பது வருடமாக ஒருவர் கையில் இருந்த சங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு 3 வருடங்கள் ஆகிவிட்டது தேர்தல் முடிந்தவுடன் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது எங்களது கடமை என தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!