18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்..

ஆம்பூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 10:24 am

வேலூர் மாவட்டம் பெங்களூரு சென்னை தேசிய 4 வழி சாலையில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் இன்று 17.06.19 விடியற்காலையில் பெங்களூருவிலிருந்து சென்னையை நோக்கி சென்ற தமிழக அரசு விரைவு பேருந்து (ஓட்டை உடைசல் பஸ்) சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. தூக்கத்தில் இருந்த பயணிகள் பயத்துடன் கூச்சலிட்டனர்.

தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா காவல்துறை யினர் விரைந்து வந்து 40 -க்கும் மேற்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலான தமிழக அரசு விரைவு பேரூந்துகள் ஓட்டை உடைசலுடன் நெடுந்தொலைவு தூரத்திற்கு இயக்கப்படுவது இது போன்ற விபத்துக்கு காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதை போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனிப்பார்களா? அல்லது தண்ட சம்பளம் மற்றும் கமிஷன்  வாங்கி கொண்டு சும்மா இருப்பார்களா? என்பது தமிழக பயணிகளின் கேள்வியாக உள்ளது.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!