17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » Kilakkarai Pigeon Tournament Club நடத்திய மாபெரும் போட்டிக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு..

Kilakkarai Pigeon Tournament Club நடத்திய மாபெரும் போட்டிக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2019, 12:42 am

கீழக்கரையில் Kilakkarai Pigeon Tournament Club சார்பாக தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக ஹோமர் புறா (Homer Pigeon – வீட்டு வளர்ப்பு) பந்தயம் கடந்த ஃபிப்ரவரி மாதமும் அதை தொடர்ந்து ஒற்றை சாதா புறா பந்தயம்  ஜூண் மாதம் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நடந்தது.

இப்போட்டியில் ஏராளமான புறா வளர்க்கும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில்  கீரக்கரையில் இருந்து 178 கி.மீ முதல் 599 கி.மீ வரையிலான நாலு வகையான போட்டிகள் நடைபெற்றது.  இதில் இறுதி வெற்றியாளர்களாக ஹோமர் புறா பந்தயத்தில் முதல் பரிசு அப்துல்,  இரண்டாம் பரிசு யாசர்,  மூன்றாம் பரிசு ஹமிதுகான் ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த பந்தயத்தில் புள்ளிகளின் அடிப்படையில் யாசர் சாம்பியனாகவும்,  மூன்று நாள் பறவை புறா பந்தயத்தில் முதல் பரிசு அன்சாரி என்ற (கவுல்), இரண்டாம் பரிசு நாப்தீன் மற்றும் மூன்றாம் பரிசு அஸ்லம் என்பவரும் பெற்றனர்.  இப்போட்டியை கீழக்கரையைச் சார்ந்த செய்யது என்பவர் ஏற்பாடு செய்து நடத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!