18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி அருகே விஷம் வைத்து 13 நாய் கொலை..

கடலாடி அருகே விஷம் வைத்து 13 நாய் கொலை..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 7:17 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது வளர்ப்பு நாய், ஆப்பனூர் அருகே தெற்கு கொட்டகையைச் சேர்ந்த முருகவேல் என்பவரது வெள்ளாட்டை கடித்தது காயப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் விஷம் கலந்த உணவை மங்கலம் கிராமத்தில் வீசினார். இதனை தின்ற அப்பகுதியைச் சேர்ந்த 13 நாய்கள் இறந்தன. மேலும் காகம் உள்ளிட்ட பறவை களும் உயிரிழந்தன. மாரிமுத்து புகாரில் முருகவேல் மீது கடலாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!