17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையில் கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த பெண்மணி..

சாலையில் கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த பெண்மணி..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 5:37 pm

கடையநல்லூர் இரசாலிபுரம் தெருவில் குடியிருக்கும் மஞ்சி முகம்மது யாசின் மனைவி கலங்காத்தான் சாராபானு என்பவர் காலையில் பஜார் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபடும்போது அந்த வழியில் சாலையோரம் 11 கிராம் தங்கச் நெக்லஸ் கிடப்பதை பார்த்து கண்டெடுத்தார்.

அதன் பின்னர் அருகில் உள்ள அப்சல் என்பவரிடம் தெரிவித்தார்.  அவர்  குறிச்சி சுலைமான் மூலம்  முகநூல் பக்கம் மற்றும் வாட்ஸப் செய்தி தளங்களிலும் இது குறித்து அறிவிப்பு செய்தார். அந்த  முகநூலில் செய்தியை பார்த்த மஹ்பூபாவின் உறவினர் காணபோன செயின் குறித்த விபரங்களை சொல்லி அதன் பின்னர் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கோவிந்தனிடம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து  தங்க செயினை தவற விட்ட கலில்ரஹ்மான் மனைவி மஹ்பூபா( 55) மற்றும் சாலையோரம் செயினை கண்டெடுத்த மஞ்சி முகம்மது யாஸின் மனைவி சாராபானு ஆகியோரை காவல் நிலையம் வரவழைத்து காவல் ஆய்வாளர் கோவிந்ன் விசாரணை செய்து முறையாக தங்க நெக்லஸை உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டது.

அப்போது காவல் உதவி ஆய்வாளர் மகேஷ், தனிபிரிவு ஏட்டு செய்யது அலி மற்றும் அப்சல் ஆகியோர் உடன் இருந்தனர். செயினை ஒப்படைத்தை பெண்னின் நேர்மையை காவல் ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!