17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்டும் காணாமல் கடந்து செல்லும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்..

கண்டும் காணாமல் கடந்து செல்லும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 5:15 pm

கண்ணிருந்தும் குருடர்களாய் செயல்படுவது போல்  மாநகராட்சி ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை  எல்லிஸ் நகர் பிரதான சாலையில் உடைந்து கிடக்கும் மூடியை கடந்து செல்கிறார்கள். இந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லீஸ் நகரில் உள்ள சர்வோதயா நகர் பிரதான சாலை16 வது வார்டு வழியாகவே தினமும் அனைத்து அதிகாரிகளும், ஊரியர்களும் கடந்து செல்கிறார்கள். ஆனால் யாருக்கும் இப்பிரச்சினையை சரி செய்ய வேண்டும் எண்ணம் இல்லாமல் இருப்பது வேதனையான விசயம்.

இப்பகுதியில் மருத்துவமனை மற்றும் பள்ளிகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் மூடி வலுவிழந்து உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. இதனால் மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பலமுறை அதிகாரிகள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி ஆணையாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பாரா??. சம்பந்தப்பட்ட அந்த பகுதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!