17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு மாற்றியமைக்காக TARATDAC அமைப்பு நன்றி தெரிவித்துள்ளனர்..

மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு மாற்றியமைக்காக TARATDAC அமைப்பு நன்றி தெரிவித்துள்ளனர்..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 9:53 am

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கையின் பலனாக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12.06.19 முதல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் தேவையற்ற அலைச்சலை குறைக்கும் வகையில் செய்துள்ள இந்த ஏற்ப்பாட்டால் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணகளை பெற முடியும்.

TARATDAC யின் நியாயமான கோரிக்கையை ஏற்று மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு மாற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் –மாவட்ட செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!