17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் ஆட்டோவில் தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த டிரைவர்..

ராணிப்பேட்டையில் ஆட்டோவில் தவறவிட்ட 5 சவரன் நகையை ஒப்படைத்த டிரைவர்..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2019, 8:58 am

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் தினகரன் .காரைமேட்டுதெருவை சேர்ந்த சிவா, மீனா தம்பதியர் சம்பவத்தன்று ஆட்டோவில் பயணம் செய்த போது 5 சவரன் தங்க நகையை தவற விட்டு விட்டார்.

பிறகு அதை தற்செயலாக கவனித்த டிரைவர் தினகரன் எடுத்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் சிவா ராணி தம்பதியிடம் நகையை ஒப்படைத்தனர். டிரைவர் தினகரனின் செயலை பாராட்டி அவருக்கு போலீசார் சால்வை அணிவித்தனர். தினகரனை சக ஆட்டோ டிரைவர் களும் பொதுமக்களும் பாராட்டினர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!