18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 60 நாள் மீன்பிடி தடைக்கு பின் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள்… குவியலாக அள்ளி வந்த இறால், நண்டு வகைகள்..

60 நாள் மீன்பிடி தடைக்கு பின் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள்… குவியலாக அள்ளி வந்த இறால், நண்டு வகைகள்..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 7:01 pm

தமிழக கடலோர பகுதிகளில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீன் பிடி முறைக்கு ஏப்.15 முதல் ஜூன் 14 வரை தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்து நேற்று (ஜூன் 14) நிறைவடைந்தது.

இதனையடுத்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் வீசிய வலைகளில் அதிக மீன் வரத்து இருந்ததுள்ளது. வழக்கமாக முதல் நாள் காலை கடலுக்குச் செல்லும் படகுகள் மறு நாள் காலை தான் கரை திரும்பவர். ஆனால் இரண்டு மாதம் கழித்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கிலோ கணக்கில் இறால், நண்டு மீன்களுடன் இன்று மாலை (15/06/2019) திரும்பினர். மீன்களை கரையில் இறக்கி விட்டு மீண்டும் தொழிலுக்குச் சென்றனர்.

படகு ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை லாபம் கிடைத்தாக படகு உரிமையாளர்கள் மகிழ்ந்தனர். நாளை அதிகாலை மற்ற மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!