17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம்..

உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 6:44 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கர்ப்பிணிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ சிகிச்சை முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், ஈசிஜி, இரத்தபரிசோதனை, உட்பட பல பரிசோதனைகள் செய்யபட்டு அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுமுறை பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த முகாமில் கலந்து கொண்டு பல்வேறு சிகிச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் மேல்சிகிச்சைக்காக அவர்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிகழ்ச்சி உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி மருத்துவர் சுசிலா தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!