18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிரங்குடி மேலவலசை அருகே கள்ளத் தொடர்பு சம்பந்தமான தகராறில் ஒருவர் அடித்து கொலை…

காஞ்சிரங்குடி மேலவலசை அருகே கள்ளத் தொடர்பு சம்பந்தமான தகராறில் ஒருவர் அடித்து கொலை…

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 4:15 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மேலவலசை வேலுச்சாமி, 45. இவரது மனைவி கோவிந்த ராணி. இவரது உறவினர் ராமதாஸ். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக வேலுச்சாமி சந்தேகமடைந்துள்ளார்.

இந்நிலையில், ஜூன் 13 இரவு 11 மணியளவில் குடி போதையில் இருந்த வேலுச்சாமிக்கும், ராமதாசுக்கும் இடையே, கள்ளத்தொடர்பு சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவேசமடைந்த ராமதாஸ் இரும்பு கம்பியால் வேலுச்சாமி தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த வேலுச்சாமி இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 14 இரவு இறந்தார்.

இது குறித்து வேலுச்சாமியின் தங்கை வீரம்மாள் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் ராமதாஸ் மீது கீழக்கரை போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!