18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிக்கிறதா??..

மதுரையில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிக்கிறதா??..

எழுதியவர்: ஆசிரியர் June 15, 2019, 2:52 pm

மதுரையில் முன்னர் 2000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது.  இந்நிலையில் சமீப காலமாக 200ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த கள்ள நோட்டு புழக்கத்தால் சிறு வியாபாரிகள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  அறியாமல் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் பிற பெரும் நிறுவனங்களில் மாற்ற செல்லும் பொழுது கள்ள நோட்டு என்று திருப்பி அனுப்பபடுகிறார்கள்.  இதனால் உழைத்து சம்பாதித்த வருமானத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

ஆகையால் இது சம்பந்தமாக அரசு அதிகாரிகள், காவல்துறை,  வங்கி நிர்வாகம் இணைந்து  உரிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்  என வியாபாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!