17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதிகளில் கோவில் திருவிழாக்களினால் நகரப் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல்…

உசிலம்பட்டி பகுதிகளில் கோவில் திருவிழாக்களினால் நகரப் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல்…

எழுதியவர்: ஆசிரியர் June 14, 2019, 5:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பல்வேறு பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் இன்று (14/05/2019) முகூர்த்த நாள் என்பதால் உசிலம்பட்டி நகரப் பகுதிகளில் கடும் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது, இதனால் தேனி திண்டுக்கல் கன்னியாகுமாரி, கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் நின்றன உடனடியாக போக்குவரத்து போலீசார் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்ததி கொடுத்தனர், அதனை தொடர்ந்து வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன. இதனால் உசிலம்பட்டி நகரப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவிழா மற்றும் முகூர்த்த நாள் வரும் பட்சத்தில் போக்குவரத்தை சரி செய்ய கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!