17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக இயங்கும் ஷேர் ஆட்டோக்கள்…

மதுரை மாவட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக இயங்கும் ஷேர் ஆட்டோக்கள்…

எழுதியவர்: ஆசிரியர் June 14, 2019, 1:56 pm

மதுரை மாநகர் முழுவதும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறது. இதில் ஒரு ஆட்டோவில் 3 பேர் தான் பயணிக்க வேண்டும் என போக்குவரத்து விதி உள்ளது, ஆனால் இவர்களது பின்பற்றாமல் ஒரு ஷேர் ஆட்டோவில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றிச்சென்று போட்டி போட்டுக் கொண்டு செல்கிறார்கள். சில சமயங்களில் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கி சிலர் படுகாயமடைந்துள்ளனர், சில சமயம் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இது போன்ற நிகழ்வு இன்று (14/06/2019) காலை சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே ஒரு ஷேர் ஆட்டோ நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் சுமார் 15 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு யாரும் காயம் ஏற்படவில்லை ஆனால் ஆட்டோ ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, ஆனால்  இச்சம்பவம் பற்றி முறையாக அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் வெளியில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுவும் பெரும் சந்தேகத்தை கிளப்புகிறது.  இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!