17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில்குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கருத்தரங்கு..

இராமநாதபுரத்தில்குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கருத்தரங்கு..

எழுதியவர்: ஆசிரியர் June 14, 2019, 1:42 pm

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கருத்தரங்கு ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்பென்ட் சொசைட்டி சார்பில் ஜனார்தன் மாளிகையில் நடந்தது. இயக்குநர் சா.சாத்தையா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் டி.கனகவள்ளி வரவேற்றார்.

தொழிலாளர் நல ஆய்வாளர் பி.சங்கர், குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் எஸ்.துரைமுருகன், குழந்தைகள் நலக்குழு தலைவர் எஸ்.துரைராஜ், செயலாளர் வி.சவுந்திரமாலதி, செயற்குழு உறுப்பினர் எஸ்.சத்திய சேகரன், சைல்டு லைன் இயக்குநர் கே. கருப்பசாமி, ஸ்பீடு தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.தேவராஜ் உள்பட பலர் பேசினர். குழந்தை தொழிலாளர் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.மரியஸ்டெல்லா நன்றி கூறினார். முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு பேரணி நடந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!