18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே மாடு முட்டி யதில் கிணற்றுக்குள் விழுந்த 2 பெண்கள் உயிருடன் மீட்பு…

திருப்பத்தூர் அருகே மாடு முட்டி யதில் கிணற்றுக்குள் விழுந்த 2 பெண்கள் உயிருடன் மீட்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 14, 2019, 1:34 pm

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந் திலிகிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி இவரது மனைவி நிர்மலா (30) இவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேச்சலுக்காக அருகில் உள்ள நிலத்திற்கு ஓட்டி சென்றார் அப்போது மாடு திடீரென்று மிரண்டு ஓடியது. அதை பிடிக்க நிர்மலா முயன்ற போது மாடு முட்டியதில் அருகில் இருந்த 80 அடி கிணற்றில் தவறி விழுந்தார். அதை பார்த்த அவரது மாமியார் முனியம்மாள் (60) மாட்டை பிடிக்க முயன்ற போது அவரையும் மாடு முட்டியதில் அவரும் விழுந்தார். அவர்களின் கூக்குரலை கேட்டு ஓடி வந்து பார்த்து திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர்.

உடனடியாக வந்த அவர்கள். தண்ணீர் இல்லாத கிணற்றிலிருந்து 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து கந் திலி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே, எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!