18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ 8.லட்சம் கொள்ளை..

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ 8.லட்சம் கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 4:23 pm

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். அதிமுக பிரமுகர்.இவர் ஆலங்குளத்தில் உள்ள வங்கியில் பணம் எடுத்து தனது காரில் வைத்துள்ளார். காரை போஸ்ட் ஆபீஸ் முன் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது பணம் மாயமானது தெரியவந்தது.

இதை அடுத்து பணம் வைத்திருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ 8 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். சற்றுமுன் (13.06.19 சுமார் 3.00 மணியளவில்) நடைபெற்ற இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!