தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து,நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.கடையநல்லூர்,வடகரை அருகே உள்ள பிரதான அணையான அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 27 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்குவது வழக்கம். இந்தாண்டு சில நாள்கள் தாமதமாக ஜூன் 8-இல் தொடங்கியது. பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும் பரவலாக சாரல் மழைப் பொழிவு உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் மழைப் பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானது.கோடை மழை இல்லாமல் அணைகள் வறண்டு போன நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடக்கத்திலேயே பரவலாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
தற்போது பெய்துவரும் தென்மேற்குப் பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியில் கோடை காலம் முடிவடைந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ காற்று வீசத்தொடங்கியது.
இந்த நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. அதையொட்டி அமைந்துள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்யத் தொடங்கியது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அடவி நயினார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது, இந்த அணைக்கு நேற்றை தினம் வரை வினாடிக்கு 17கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 19 அடியில் இருந்து 27 அடியாக உயர்ந்தது. அதாவது, இரண்டு நாளில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது.இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்







You must be logged in to post a comment.