17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழகம் ஷேர் ஆட்டோவுக்கு போட்டியாக குறைந்த பட்ச கட்டணம் ₹.5/- நிர்ணயம்..

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழகம் ஷேர் ஆட்டோவுக்கு போட்டியாக குறைந்த பட்ச கட்டணம் ₹.5/- நிர்ணயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 3:15 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. ஷேர் ஆட்டோக்கள் கிராமப் பகுதிகளில் அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் ஏறலாம். நினைத்த இடத்தில் இறங்கலாம் என்பதால் பெரும்பாலும் பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களில் விரும்பி அதிகம் பயனிக்கின்றனர். இதனால் கிராமப்பகுதிகளில் அரசு பேருந்தில் பொதுமக்கள் பயனிப்பது மிகவும் குறைந்து கொண்டே செல்கிறது.

மேலும் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ 7 என்பதால் ஷேர் ஆட்டோவில் ரூ 5 என்பதால் உசிலம்பட்டி பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதனால் கிராமப் பகுதி களுக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏற ஆள் இல்லாததால் பல கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்தின் இயக்கம் தடைப்பட்டு வருகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்களின் அதிவேகத்தால் விபத்துக்களும்அடிக்கடி ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உசிலம்பட்டி போக்குவரத்து கழகத்திலிருந்து கிராமத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் மிக குறைந்தபட்ச கட்டணம் ரூ 5 மட்டும் என விழிப்புணர்வு நோட்டிஸ் ஒட்டி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து நஷ்டத்தில் இயக்கப்படுவது ஓரளவுக்கு கட்டுப் படுத்தப்படும் எனவும், பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களில் பயனம் செய்வது குறையும் எனவும், விபத்துக்களை தவிர்க்கலாம் என கிளை மேலாளர் கண்ணன் கூறுகின்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!