17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தொடரும் சாலை மறியல்..

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தொடரும் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 3:09 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்திரன்புரி தெரு பகுதி மக்கள் திடீரென்று இன்று (13/06/2019) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு காரணம் கடந்த 11.6.19ம் தேதியன்று லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்களுக்கும் சருத்துப்பட்டி பகுதியைச் சார்ந்த தலித் சமூகத்தினருக்கும் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது சம்மந்தமாக நிலவி வந்த பிரச்சினையில், தலித் சமூகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் மக்கள் தேனி மெயின் ரோட்டில் சாலை மறியலில் நேற்று (12/06/2019) ஈடுபட்டனர். அப்போது பெரியகுளம் இந்திரபுரி தெரு பகுதியைச் சார்ந்த அஜித்குமார மற்றும் சுரேந்தர் ஆகிய  இருவர் இரு சக்கர வாகனத்தில் தேனியை நோக்கி சென்றுள்ளனர்.

அப்பொழுது இவர்கள் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று கூறி லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறியப்படுகிறது. அத்தாக்குதலில் காயமடைந்த இருவரும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் பெரியகுளம் சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக இப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

A.சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!