23 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ மோசடியா??உண்மை நிலை என்ன??…

இராமநாதபுரத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ மோசடியா??உண்மை நிலை என்ன??…

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2019, 12:43 am

இராமநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவர் ஜோசப் ராஜன், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்தில் பிரபல மருத்துவமனையில் பொதுநல மருத்துவராக பணிபுரிந்தவர், கைராசி மருத்துவர் என்ற பெயருடன் சில வருடங்களில் ராஜன் கிளினிக் எனும் மருத்துவமனையை தொடங்கினார்.

பின்னர் கைராசிக்கு பெயர் பெற்ற அவரால் விரிவுபடுத்தப்பட்ட வளாகம் நேர்மைமைக்கு பெயர் பெற்ற இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமையில் 2015ம் ஆண்டு சிறப்பு மருத்துவமனையாக  திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சார்ந்தவர் இம்மருத்துவமனையில் சில பரிசோதனைக்கு சென்றதாகவும், அங்கு பரிசோதித்த முடிவில் திருப்தியடையாமல் வேறு இரு மருத்துமனைகளில் சோதனை செய்த பொழுது வேறுபட்ட முடிவு வந்தத்தாகவும், இது சம்பபந்தமாக இராமநாதபுரம் ஆட்சியரிடம் 10/06/2019 அன்று புகார் அளித்ததாக கையொப்பம் இல்லாத கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இச்சம்பவம் பல வருடங்களாக அங்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பெரும் சந்தேகத்தையும், குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளது.  ஆகையால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் தீர விசாரித்து பொதுமக்களுக்கும், பல வருடங்களாக நம்பிக்கையுடன் வந்து செல்லும் நோயாளிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.  அவ்வாறு தெளிவுபடுத்தாத பட்சத்தில் இது மருத்துவ துறைக்கே பெரும் கரும் புள்ளியாக மாறும் என்பதில்  சந்தேகமில்லை .


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!