18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வேலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…

வேலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…

எழுதியவர்: ஆசிரியர் June 12, 2019, 2:59 pm

12.06.19 ந் தேதி 11.00 மணியளவில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி.

எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த உறுதிமொழியில், இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி 14-வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவீத பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவேன் எனவும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!