17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிதவைகள் அமைக்க மீனவர் எதிர்ப்பு..

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிதவைகள் அமைக்க மீனவர் எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 2:28 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே. முனியாண்டி தலைமை வகித்தார். தேசிய கடல் பூங்கா திட்டத்தின் கீழ் மன்னார் வளைகுடா தீவு பகுதியில் மிதவைகள் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும், மீனவர் வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் குரு சடை தீவில் படகு சவாரி இயக்கும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட சிஐடியு செயலர் எம்.சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் எம்.கருணாமூர்த்தி, தோப்புக்காடு பி.ராமநாதன், எம்.பிரியா, சின்னப்பாலம் கே.குப்புச்சாமி, கே.லட்சுமி மற்றும் பாம்பன், தோப்புக்காடு, தெற்குவாடி, சின்னப்பாலம் உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த மீனவ பெண்கள், பள்ளி குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!