17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக கடல் தினதந்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..

உலக கடல் தினதந்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 12:37 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக கடல் தினத்தை முன்னிட்டு ஆழி திட்டத்தின் கீழ் இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் மோர்ப்பண்ணை கடற்கறையில் 09-06-2019 அன்று கடற்கரை தூய்மை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு ஆழி திட்டத்தை பற்றியும், கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும், கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர் பாதுஷா கலந்து கொண்டு கடற்கரையில் இருக்கக்கூடிய குப்பைகளை அகற்றுவது, கடல் வளங்களின் பாதுகாப்பு, சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்தும் இளைஞர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இளைஞர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!