18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வளரிளம் பெண்களுக்கு தொற்றா நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் ..

வளரிளம் பெண்களுக்கு தொற்றா நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் ..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2019, 12:01 am

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.இதில் 6,7,8ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் வயதில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மாணவிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியை செல்வமீனாள் அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த செவிலியர் ஷீலா முன்னிலை வகித்தார்.திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் இந்து பெண்களின் உடல் நல பிரச்சனைகள் குறித்து விளக்கமளித்து பேசுகையில்,மாணவிகள் ரத்த சோகை நீங்க கடலை மிட்டாய், பொறி உருண்டை, பழங்கள், கீரை வகைகள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். மாணவிகள் தங்களின் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக பால், தயிர், மோர் சாப்பிட வேண்டும். டீ, காபி அதிகம் குடிக்க கூடாதுஎன்றார்.

நிகழ்வில் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்தமீனாள் நன்றி கூறினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!