17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் கோவில் பணியாளர்கள்..

தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் கோவில் பணியாளர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 11:50 pm

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை அருள்மிகு கண்டேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் பணியாளர்  சுந்தரமூர்த்தி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு கோயில் நிலத்தை வேலி அடைப்பது சம்பந்தமாக எழுந்த பிரச்சினை என்பதாக அறியப்படுகிறது.

மேலும் கோயில் சொத்துகளையும் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அறநிலையத்துறையும் நீதி மன்றங்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தாக்குதல் தொடர்கிறது. மேலும் தாக்குதலுக்கு ஆளான சுந்தரமூர்த்தியை அரசு மருத்துவமனையில்  திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்  சம்பத் குமார்.  திருக்கோவில் தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணன் சேர்ந்து மேவையான உதவிகளை செய்தனர்.

கோவில்களில் பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பு வேண்டி அரசு மற்றும் அறநிலையத்துறை கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த வேண்டும் என்று திருக்கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!