18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து துவங்கியது-சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…

குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து துவங்கியது-சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 9:48 pm

குற்றால அருவியில் காலதாமதமாக சாரல் மழை பொழிந்து சீசன் துவங்கிய நிலையில் மெயின்அருவியில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகிய பிரதான அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்து வருவது வழக்கம். ஆனால் சிற்றருவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. அங்கு இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்டபடி ஜூன் 1ம் தேதி துவங்கவில்லை.

சுற்றுலாப்பயணிகள் குற்றால சீசனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று மாலையில் மேற்குத்தொடர்ச்சி மலையை சுற்றிலும் மழை மேகக்கூட்டங்கள் திரண்டு நின்று சாரல் மழையை பொழிந்தது. முதலில் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் சிறிதளவு விழுந்த நிலையில் மிக முக்கிய அருவியான மெயின் அருவியில் தண்ணீர் விழாமல் பாறை மட்டுமே காட்சியளித்தது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த குற்றாலம் மெயின் அருவியிலும் தண்ணீர் விழத்துவங்கியது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள், மற்றும் இங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வரத்துவங்கியுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!