17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி அருகே கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் உருண்டு மாணவர்கள் போராட்டம்…

கமுதி அருகே கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்கக்கோரி சாலையில் உருண்டு மாணவர்கள் போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 5:45 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோடங்கிபட்டியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சாலை கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக காணப்படுகிறது. இதனால் இச்சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்களின் கால்களை கற்கள் பதம் பார்த்தன.

இச்சாலையை சீரமைக்கக்கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த கோடங்கிபட்டி பள்ளி மாணவர்கள், கற்கள் பெயர்ந்த சாலையில் இன்று காலை படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியருக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!