17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் வாலிபர் குத்தி கொலை…

வாணியம்பாடியில் வாலிபர் குத்தி கொலை…

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2019, 12:58 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) இன்று 10-ம் தேதி விடியற்காலை தலைமேல்கல்லை போட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதே சமயம் ரியல் எஸ்டேட் பிரச்சனையில் இந்த படுகொலை நடந்து இருக்கலாம்  என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நிலம் சம்மந்தப்பட்ட வழக்கு இன்று வாணியம்பாடி கோர்ட்டில் தீர்ப்பு வர உள்ள நிலையில் இந்த கொலை நடந்து உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட மணிமாறன் ஆலங்காயம் அடுத்த மிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!