17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விராட்டிபத்து பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு..

விராட்டிபத்து பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 6:25 pm

மதுரை விராட்டிபத்து 22வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பாக குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த இடத்தின் அருகாமையில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையமும் உள்ளது.

இந்த இடத்தில குப்பை கிடங்கு அமைத்து உரம் தயாரித்தல்,  குப்பை பிரித்தெடுக்கும் பணிகளும் நடைபெற இருப்பதால் இப்பகுதி மக்களின் சுகாதாரம் சீர் கெடும் மற்றும் நிலத்தடி நீரும் பாதிப்படையும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஆகையால் இத்திட்டத்தை இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோரி முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் சட்ட பஞ்சாயத்து சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!