17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 12:51 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா அழகை கடந்த மாதம் சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 56 ஆயிரத்து 436 சுற்றுலாப் பயணிகள் பிரையன்ட் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர். மலர் கண்காட்சி நடைபெற்ற 3 நாட்களில் 39 ஆயிரத்து 794 பேர் பிரையன்ட் பூங்காவின் அழகை கண்டு ரசித்துள்ளனர்.

இதன் மூலம் சுமார் 12 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக பூங்கா அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த 2018 -19 ஆம் நிதி ஆண்டில் 4 லட்சத்து 36 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!