17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் தீ விபத்து…

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் தீ விபத்து…

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 9:49 am

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் பிரியாணி கடை உள்ளது. அதில் இன்று 9-ம் தேதி காலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பெரும்பாலான  பொருள்கள் தீயில் எரிந்தன.

வேலூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டு சமைலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் இங்கு பயன்படுத்துகின்றனர். அதிலிருந்து கேஸ் கசிந்து தீ பிடித்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் வட்ட வழங்கல் துறையினரின் முறையான சோதனைகள் இல்லாத  காரணத்தால் இது போன்ற சம்பவம் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!