17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்..

திருப்பரங்குன்றத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 10:55 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சேதமடைந்தது, இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல்  உள்ளது.

இது சம்பந்தபாக அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று (08/06/2019) இரவு சுமார் 10 மணி அளவில் திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் ஐசிஐசிஐ வங்கி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து நேரடியாக தொலைபேசியில் மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் கேட்டதில்,  போர்க்கால அடிப்படையில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் இன்னும் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் மின்சாரம் முழுவதாக கிடைக்க ஏற்பாடு செய்து விடுவோம் என உறுதி அளித்துள்ளனர்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!