17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கணவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை..

கணவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த மனைவி விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 10:45 am

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு  முத்து கவுண்டர் தெரு சேர்ந்த ஜோதிலட்சுமி 28 வயது கணவர் அருண் இருவருக்கும் திருமணமாகி ஒன்பது வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஏழு வயதில் திசிகா என்ற பெண் குழந்தையும், 4 வயதில் சச்சின் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

ஜோதிலட்சுமி வெளிச் சந்தையில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். அருள் எம்பிஏ படித்து வேலைக்கு போகாமல் மது, புகையிலை போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். பலமுறை இந்தப் பழக்கத்தை விடுங்கள் என்று மனைவி கண்டித்ததால் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த ஜோதிலட்சுமி வெளிச்சந்தையில் உள்ள அம்மா வீட்டுக்குச் அடிக்கடி சென்ற நிலையிலும் அருண் அவரது மனைவி ஜோதிலட்சுமியிடம் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டு வந்துள்ளார். இச்சூழலில் மனமுடைந்த ஜோதிலட்சுமி வெளிச்சந்தையில் உள்ள அம்மா வீட்டில் இரவு 2 அளவில்  பூச்சி மருந்து சாப்பிட்டு வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.  இது சம்பந்தமாக பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!