17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் பைபாஸ் நான்கு வழி சாலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை…

திண்டுக்கல் பைபாஸ் நான்கு வழி சாலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை…

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 10:34 am

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே, மதுரை பெங்களூர் செல்லும் நான்கு வழி சாலை நடுவே தடுப்பு சுவற்றில் அடையளம் தெரியாத ஆண் பிணம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர் உடலை ஆய்வு செய்த போது அவரிடம் இருந்த ஒரு ரசீதில் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த முரளி (வயது 35)  தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லின்டா வரவழைக்கபட்டு சிறிது தூரம் ஓடி யாரையும் அடையாளம் காணவில்லை. கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இறந்து கிடந்தவர் கொடைக்கானல் சுற்றுலா ஏஜென்ட் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இது சம்பந்தமாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!