18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் பரிதாபம் பொருட்காட்சி ராட்டினத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி..

வாணியம்பாடியில் பரிதாபம் பொருட்காட்சி ராட்டினத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி..

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 10:16 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் கடந்த சில நாட்களாக தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகின்றது. நேற்று (07/06/2019) இரவு காட்சியில் டிராகன் போன்ற வளைவு கொண்ட ராட்டினம் வளைந்து வளைந்து ஆட்களை ஏற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தது.

அப்போது காவாக்கரை பகுதியை சேர்ந்த விஜயா என்பவரின் 9-ம் வகுப்பு மாணவன் விஷ்ணு (14) வெளியில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் போது அந்த ராட்டினத்தில் பட்டு இழுத்து செல்லப்பட்டு மாணவன் படுகாயம் அடைந்தான். உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். வாணியம்பாடி நகர போலீசார் விசாரனண செய்து வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடே இந்த விபத்திற்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!