17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

நிலக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 10:00 am

நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை  சார் நிலை கருவூல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்.தற்போது நடைமுறையில் உள்ள   தனி இயக்க கருவூல பட்டியலில் உள்ள நடைமுறையை வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி முறை ஓய்வூதியம் என்ற முறையில் அமுல்படுத்த இருக்கும் ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விரோத போக்கை கண்டித்தும்,  அரசு ஊழியர்களின் ஆசிரியர்களின் அடுத்த மாத சம்பளம் இல்லை என மிரட்டும் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட்டு அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக செய்து முடிக்கப்படும் வரை பழைய முறையிலேயே சம்பளப்பட்டியல் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சீனிவாசன, மாவட்ட இணைச்செயலாளர் டேனியல், மற்றும் வட்ட நிர்வாகிகள் பாலம் குருநாதன் சின்னராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!