17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூர் நகராட்சி ஆணையர் உத்தரவின் படி தினசரி சந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

கடையநல்லூர் நகராட்சி ஆணையர் உத்தரவின் படி தினசரி சந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 11:03 pm

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்பட்டது. கடையநல்லூர் நகராட்சி ஆணையர் திரு பவுன்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் 07.06.19 இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

ஆக்கிரமிப்புக்களை அகற்றும் இந்நிகழ்வின் போது சுகாதாரஅலுவலர் நாராயணன், நகராட்சி உதவி பொறியாளர் திரு முரளி, நகரமைப்பு ஆய்வாளர் திரு ஜின்னா, சுகாதார ஆய்வாளர்கள் திரு சேகர் , மாரிச்சாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் செய்தனர் !

நடைபாதை வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் கடைகள் அமைப்பது கூடாது என ஆணையாளர் அறிவுறுத்தினார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!