18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பால்வளத்துறை அமைச்சர் உறவினர்களிடம் 60 சவரஅனல் நகை திருட்டு..

பால்வளத்துறை அமைச்சர் உறவினர்களிடம் 60 சவரஅனல் நகை திருட்டு..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 10:59 pm

சிவகாசி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீடு சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ளது. அமைச்சரின் உறவினரான வசந்தகுமார் மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி கிராமத்திற்கு திருமணத்திற்கு வாடகைக் காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் வந்து பார்த்த போது காரில் சூட்கேஸில் இருந்த தங்கச் செயின்கள் கவர்னர் மாலை, உட்பட 60 பவுன் நகை காணமல் போனது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அமைச்சர் உறவினர்கள் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!