17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் 15.6.2019 ல் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல்…

இராமநாதபுரத்தில் 15.6.2019 ல் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல்…

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 5:55 pm

தமிழக தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 15.06.2019 சனிக்கிழமை அன்று இராமநாதபுரம் ரோமன் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகேஉள்ள இன்பன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலை தேடுவோரை தெரிவு செய்ய இருக்கின்றன.  இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர், செவிலியர்  மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடையோர் முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியை தாங்களே தேர்வு செய்வதற்கான அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்கள், இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தெரிவு செய்து கொள்ளலாம். தகுதியுடையோர் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப  அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம்  செய்யப்படும் பட்சத்தில் பணி கிடைத்தோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டு ரத்து செய்யப்படமாட்டாது. அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி தங்கள் பெயர் பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!