17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்..

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 3:17 pm

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பத்தூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் செ, நா.ஜனார்த்தனன் வரவேற்றார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் சீ.முரளீதர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.ரதி சிறப்புரை ஆற்றினார்.

பள்ளி அளவில் சிறப்பாக செயல்பட்ட தேசிய பசுமைப் பாட மாணவிகள் அபிநயா ஸ்ரீ, ஷாலினி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி உதவித் தலைமை ஆசிரியை திருமொழி, உடற்கல்வி ஆசிரியை புவனா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் செலின் நன்றி கூறினார்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!