17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் விதமாக துணிப்பை மற்றும் மரக்கன்று விநியோகம்..

உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் விதமாக துணிப்பை மற்றும் மரக்கன்று விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 3:12 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்கும் விதமாகவும், பசுமை நினைவு அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ம.புளியங்குளத்தில் பசுமை நினைவு அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் பா.உலோகநாதன்,சோலைமலை,இயற்கை விவசாயி ப.ராமர் மற்றும் தொழிலதிபர் கரந்தமலை ஆகியோர் கலந்து கொண்டு துணிப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மரம் வளர்த்து பராமரிப்பது குறித்தும்,பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக துணிப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!