18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் சிறு மழைக்கே தாங்காத மதுரை போடி இரயில்வே பாலம் …

உசிலம்பட்டியில் சிறு மழைக்கே தாங்காத மதுரை போடி இரயில்வே பாலம் …

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 3:06 pm

இரயில்வே துறையின் மூலம் மதுரை போடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லி வீரன்பட்டி கிராமத்திற்கு செல்வதற்காக இரயில்வே துறையின் சார்பில் தரைப்பாலம் கட்டபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த சிறுமழைக்கே தாங்காமல் கட்டப்பட இரயில்வே தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தன. மேலும் அந்த பாலத்தை தண்ணீர் சூழ்ந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாலத்தின் வழியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்து சேதமான பாலத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை போடி தேசிய இரயில்வே பாலம் பணி நிறைவடையாமல் இருக்கும் நிலையில் பாலம் உடைந்து சேதமானது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!