18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை, 30,000/- ரொக்கம் திருட்டு…

நிலக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகை, 30,000/- ரொக்கம் திருட்டு…

எழுதியவர்: ஆசிரியர் June 6, 2019, 4:44 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வத்தலகுண்டு சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள டாக்டர் சஞ்சீவி மகன் மகன் வெங்கடேஷ் (வயது 37.) இவர் சென்னையில் பேப்பர் கப் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்துள்ளார்.

தற்போது தொழிலில் மந்த நிலை ஏற்பட்டதால் தொழிலை விட்டு நிலக்கோட்டை வந்து தன் தந்தை வீட்டில் குடியேறினார். இந்நிலையில் தனது அக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் மதுரை சென்று விட்டு கதவை திறந்து உள்ளே சென்ற போது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதில்  7 பவுண் நகை மற்றும்  30,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!