18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா…

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா…

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 6:44 pm

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உச்சிப்புளி கடற்படை விமான தள நிலையம், ஊராட்சி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஐஎன்எஸ் பருந்து நிலைய கமாண்டிங் அதிகாரி கோசாலி தொடங்கி வைத்தார். பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மண்டபம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா, என்மனங்கொண்டான் ஊராட்சி செயலர் பாதராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. ஐஎன்எஸ் பருந்து நிலைய சுற்றுச்சூழல் அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் தானிவா ராவத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!