18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வண்ணாங்குண்டில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆண்டு விழா..

வண்ணாங்குண்டில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 6:33 pm

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இன்று (05/06/2019( நோன்பு பெருநாளை முன்னிட்டு அல் மதரஸத்துல் தீனியா அரபி மதரஸா 10ஆம் ஆண்டு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

இதில் அல் மதரஸத்துல் தீனியா அரபி மதரஸா மாணவ மாணவியர்கள் பல் வேறு சிறப்பு போட்டிகளில்  கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை லஜ்னத்துல் இர்சாத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.

இரவில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லஜ்னத்துல் இர்சாத் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.. 10வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய லஜ்னத்துல் இர்சாத் இளைஞர் நற்பணி மன்றத்திருக்கு வெளிநாட்டு வாழ் வண்ணாங்குண்டு இளைஞர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

செய்தி:- பாசித், துபாயில் இருந்து…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!