17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மற்றும் வேலூர் பகுதியில் ரமலான் பெருநாள் தொழுகை..

மதுரை மற்றும் வேலூர் பகுதியில் ரமலான் பெருநாள் தொழுகை..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 5:39 pm

மதுரை

மதுரை தமுக்கம் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. மதுரை தமுக்கம் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் 15,ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மதுரை மாவட்டத்தில் அண்ணாநகர் உள்பட 27,இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

புத்தாடை அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர். இதில் மதுரை மாவட்ட தலைவர் அபிபுல்லா,துணை தலைவர் ஜெய்துல்லாதீன், மாவட்ட செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட துணை செயலாளர்கள் காமீல் பாட்ஷா,கசன் பாட்ஷா,நயினார் முகமது, மாவட்ட பொருளாளர் மன்சூர் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான்கோலா கலமாக கொண்டாடப்பட்டது. புனித ரமலான் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட் டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், போர்ணாம்பட்டு, வேலூர், விஷாரம், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஈக்தாமைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. புத்தாடை அணிந்து கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!