17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரியலூரில் சிறந்த அடிப்படை கட்டமைப்புக்கு உதாரணமாக செயல்படும் பெட்ரோல் பங்க்..

அரியலூரில் சிறந்த அடிப்படை கட்டமைப்புக்கு உதாரணமாக செயல்படும் பெட்ரோல் பங்க்..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 2:26 pm

பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் கவுல்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனம் HP பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறது. இந்த பங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான கழிவறை வைத்துள்ளார்கள் .

இங்கே ஆண்களுக்கு என்ற தனியாக கழிவறையும் , பெண்களுக்கு என்ற தனியான கழிவறையும், மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக கழிவறையும் சுத்தமான முறையில் பராமரித்து வருகிறார்கள். இந்த பங்கில் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்கள் இலவசமாக வாகனங்களுக்கு காற்று பிடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

கழிவறையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறது .இந்த பங்கில் முதலுதவி பெட்டி உள்ளது .மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறை வசதியும் உள்ளது. இந்த கழிவறைகளை சுத்தம் செய்ய ஒரு சுகாதார பணியாளர் அமைத்துள்ளார்கள் அவர்கள் காலை மாலை என இரண்டு முறையும் இந்த கழிவறை சுத்தம் செய்கிறார்கள்.கழிவறையை சுத்தம் செய்வதோடு இல்லாமல் இந்தப் பெட்ரோல் பங்கு முழுவதையும் சுத்தமாக வைத்துள்ளார்கள். இயற்கையை பாதுகாக்க பெட்ரோல் பங்க் முன்பு மரம் செடி கொடிகளை வளர்த்து வருகிறார்கள் அவற்றுக்கு முறையாக தண்ணீர் விட்டு பராமரித்து வருகிறார்கள் .

இந்த பெட்ரோல் பங்க் குறித்து மக்கள் பாதை அமைப்பு சார்பில் சமூக ஆர்வலர் மக்கள் பாதை, வெண்மணி வரதராஜன் கூறும் போது பெரம்பலூர் மாவட்டத்தில் நிறைய பெட்ரோல் பல்க் உள்ளது. ஆனால் இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முறையாக பராமரிப்பதில்லை. எனது அனுமானம் என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைவரும் இந்த பங்கில் உள்ள வசதிகளை முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுகிறது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!