17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

உசிலம்பட்டியில் உரிய அனுமதியின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 1:34 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் உரிய அனுமதியின்றி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்த தனியார் பள்ளிகளின் கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் அந்த பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர். மாணவர்களின் கல்வி கட்டணமும் அரசு அறிவிக்கப்பட்டதை காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனுமதியில்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!