17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடைபட்டு கிடக்கும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மை பணி…

தடைபட்டு கிடக்கும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மை பணி…

எழுதியவர்: ஆசிரியர் June 5, 2019, 1:20 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அருகே உள்ள சரவணப்பொய்கை ஆக்சிஷன் அளவு குறைவு மற்றும் குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை என்ற சூழல் ஏற்பட்ட பொழுது  மும்பையை சேர்ந்த பாபா அணுசக்தி ஆராய்ச்சி கழகம் மூலமாக மின்மோட்டார் மூலமாக சுழற்சி முறையில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

ஆனால கடந்த சில நாட்களாக இந்த பணி நிறுத்தப்பட்டு  மீண்டும் அசுத்தமாகவே காணப்படுகிறது.    இந்த பணியை கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நிறுத்தியதற்கு  காரணம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்  மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சி தோல்வியுற்றதுதான்  என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விசயத்தில் பாகுபாடு இன்றி கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இந்த பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த குளத்தை கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் அந்த பகுதியில் ஆகமவிதிப்படி விதிமீறலும் நடப்பதாக புகார் உள்ளது.   சரவணப்பொய்கை என்பது புனித தீர்த்தமாக கருதப்படுவதாகும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதும், செய்வினை கழிப்பது போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.  இதுபோன்ற செயல்களை உடனடியாக கோவில் நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதும் பொதுமக்கள் கோரிக்கையில் ஒன்றாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!